ஆர்யா-சாயிஷா திருமணம் ( படங்கள் இணைப்பு)

தமிழில் ‘அறிந்தும் அறியாமலும்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஆர்யா. இதையடுத்து பட்டியல், நான் கடவுள், மதராசப்பட்டினம், ராஜா ராணி, வேட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.


இதேபோல் ’வனமகன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமான  நடிகை சாயிஷா சைகல்.  கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

பின்னர் ‘கஜினிகாந்த்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது இருவருக்கும் இடையே காதல் மலர அதற்கு இருவர் வீட்டினரும் சம்மதம் தெரிவித்தனர். 


கடந்தபெப்ரவரி 14 ஆம் திகதி, தனது டுவிட்டர் பக்கத்தில் இருவரும் தங்கள் காதலை வெளிப்படையாக அறிவித்திருந்தனர். இவர்களது திருமணம் மார்ச் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் ஐதராபாத்தில் நடக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 


அதன்படி, கடந்த 9ஆம் திகதி ஆர்யா - சாயிஷா  நிச்சயம் நடந்தது. இதில் பாலிவுட்டின் பிரபலமான சஞ்சய் தத், முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


இதனைத் தொடர்ந்து நேற்று இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு, தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். சென்னையில் வரும் 14 ஆம் திகதி ஆர்யா - சாயிஷா திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment