இந்தியா தங்களை முட்டாள்கள் என நினைத்துக் கொண்டிருக்கிறது! -டொனால்ட் டிரம்ப்



வரி விதிப்பு விவகாரத்தில், இந்தியா, தங்களை முட்டாள்கள் என நினைத்துக் கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்  மீண்டும் சாடியுள்ளார். 
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தில், அமெரிக்க பழமைவாதச் சங்கம் நடத்திய மாநாடு ஒன்றில் அதிபர் டிரம்ப் பங்கேற்று 2 மணி நேரத்துக்கும் மேலாக உரையாற்றினார். அதில் பல்வேறு நாடுகள் உடனான அமெரிக்காவின் நல்லுறவு குறித்த கருத்துகள் இடம் பெற்றன. அப்போது இந்தியாவை உச்சபட்ச வரி விதிக்கும் நாடு என்று குறிப்பிட்ட டிரம்ப், அமெரிக்கா ஏற்றுமதி செய்யும் இருசக்கர வாகனங்களுக்கு இந்தியாவில் 100 விழுக்காடு வரி விதிக்கப்படுவதாகவும், ஆனால் அந்நாட்டு இருசக்கர வாகனங்களுக்கு இங்கு வரி ஏதும் விதிக்கப்படுவதில்லை என்றும் கூறினார்.
இந்தியா வரி விதிப்பது போன்றே பதிலுக்கு அமெரிக்காவும் வரி விதிக்க உள்ளதாக கூறிய டிரம்ப், குறைந்தபட்ச வரியாவது விதித்தாக வேண்டும் எனத் தெரிவித்தார். ஹார்லி டேவிட்சன் இருசக்கர வாகனத்திற்கான வரியை 100 விழுக்காட்டில் இருந்து 50 விழுக்காடாக இந்தியா குறைத்திருப்பது போதுமானதல்ல என்றும் டிரம்ப் குறிப்பிட்டார். அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி பன் மடங்கு பெருகுவதாகக் கூறிய டிரம்ப், இதுவரை தங்களை மதிக்காததுடன், முட்டாள்கள் என்றும் எண்ணிய நாடுகள் இனி மேல் மீண்டும் மரியாதை கொடுப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
Share on Google Plus

About Kayathri

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment