வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பிய விண்கலம்!!அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸாவும் SpaceX எனும் விண்வெளி ஆய்வு நிறுவனமும் இணைந்து விண்ணிற்கு செலுத்திய Crew Dragon  என்ற சோதனை விண்கலம் வெற்றிகரமாக மீண்டும் பூமிக்கு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புளோரிடா மாநிலத்திற்கு அருகேயுள்ள அட்லாண்டிக் பெருங்கடலில் Crew Dragon விண்கலம் தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சியைத் தொடர்ந்து பூமிக்கு அருகிலுள்ள சுற்றுப்பாதைக்கு மனிதர்களை அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏழு பேர் அமரக்கூடிய குறித்த விண்கலத்தில் சோதனைக்காக மனிதர்களுக்குப் பதிலாக உருவ பொம்மைகள் வைக்கப்பட்டன. கடந்த 2ஆம் திகதி விண்கலம் விண்வெளிக்கு அனுப்பிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Kayathri

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment