இத்தாலியில் மிலன் நகர் அருகே 51 பாடசாலை சிறுவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று, அதன் சாரதியால் கடத்தப்பட்டு பேருந்துக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பேருந்தில் உள்ள சில குழந்தைகள் அவர்களின் இருக்கையோடு கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில், பேருந்தின் பின்புறம் இருந்த கண்ணாடிகள் உடைக்கப்பட்டு அவர்கள் மீட்கப்பட்டனர்.
இத்தாலி குடியுரிமை பெற்ற 47 வயதான அந்த சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் செனகலை பூர்விகமாக கொண்டவர் ஆவார். 'யாரும் இதில் பிழைக்க வாய்ப்பில்லை' என்று அந்த சாரதி சொன்னதாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இத்தாலியின் குடியேறிகள் தொடர்பான கொள்கை மற்றும் மத்தியதரைக்கடல் பகுதியில் நிகழும் குடியேறிகள் மரணம் தொடர்பாக தனது சினத்தை வெளிப்படுத்தியதாக இந்த பேருந்தில் பயணித்த ஒரு ஆசிரியர் கூறியுள்ளார்.
#ItalyIncident #ViolentDriver #BurningBus #SchoolStudents #Children #ItalyFireOnBus #ItalyNews #CrimeNews #ItalyCrime #TamilNewsKing
0 comments:
Post a Comment