இளம்பெண்கள் முகத்தில் கரி பூசும் இளைஞர்கள்

சாம்பல் புதனன்று கிழக்கு சுவிட்சர்லாந்தில் பின்பற்றப்படும் ஒரு பாரம்பரியத்தின்படி இளைஞர்கள் இளம்பெண்கள் முகத்தில் கரியைப் பூசுகிறார்கள்.’Pschuure’ என்று அழைக்கப்படும் அந்த பண்டிகையின்போதுதான் இந்த மை பூசுதல் நடக்கிறது, ’Pschuure’ என்னும் வார்த்தையின் பொருளே கருப்பாக்குதல் என்பதாகும்

காலையில் வேளையில், குழந்தைகள் ஒரு கூடையை கழுத்தில் கட்டி கொண்டு வீடு வீடாக சென்று மிட்டாய்கள் கேட்பார்கள்.

திருமணமாகாத இளைஞர்கள் பயங்கர முகமூடிகளை அணிந்து, மாறு வேடமிட்டு, கையில் ஒரு இரகசிய பார்முலா கொண்ட கறுப்பு நிற மையுடன் திருமணமாகாத இளம்பெண்களைத் தேடிச் செல்வார்கள்.

அவர்கள் அணிந்திருக்கும் மணியின் ஓசை கேட்டு இளம்பெண்கள் ஓடி ஒளிந்து விடுவார்கள்.

சிக்கினால் அவ்வளவுதான், இளம்பெண்களை பிடித்து தரையில் தள்ளி, அவர்கள் முகத்தில் அந்த கறுப்பு மையை பூசி விடுவார்கள் இளைஞர்கள்.

பின்னர் முட்டைகளை பிச்சை கேட்டபடியே, அந்த கறுப்பு மை பூசப்பட்ட இளம்பெண்களைத் தேடிச் செல்லும் இளைஞர்கள், அவர்களை விருந்தொன்றிற்கு அழைக்கிறார்கள்.

நள்ளிரவுக்குமேல் ஆரம்பிக்கும் அந்த விருந்தை, மதுபான வகைகளுடன் அனைவரும் கொண்டாடுவார்கள்.

உணவிலும் மதுபான வகைகளிலும் முட்டை முக்கிய இடம்பிடிக்கிறது.

அவர்களது பாரம்பரியத்தின்படி, இந்த முட்டை உண்பது மற்றும் மதுபானம் அருந்துவது ஆகிய செயல்கள், திருமண வயதிலிருப்போர் மற்றும் விவசாய நிலத்தின் இனப்பெருக்கத் திறனை அதிகரிப்பதாக கிழக்கு சுவிட்சர்லாந்து மக்கள் நம்புகிறார்கள்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment