உடல்நலக் குறைவால் வெளியேறினார் செரீனா வில்லியம்ஸ்

இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் உடல் நலக்குறைவு காரணமாக மூன்றாவது சுற்றின் பாதியில் வெளியேறினார். 

இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் இடம்பெற்று வருகிறது. 

பெண்கள் ஒற்றையர் பிரிவின் மூன்றாவது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் உலக தரவரிசையில் 20 ஆவது இடத்தில் உள்ள ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜாவை சந்தித்தார். 

முதல் செட்டில் 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற செரீனா வில்லியம்ஸ் தொடர்ந்து விளையாட முடியாமல் அவதிப்பட்டார். 

 6 கேம்களை தொடர்ந்து தனதாக்கிய கார்பின் முகுருஜா முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் தன் வசப்படுத்தினார்.

இரண்டாவது செட்டில் கார்பின் முகுருஜா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது செரீனா வில்லியம்ஸ் போட்டியிலிருந்து உடல்நலக் குறைவால்  விலகினார். 

இதனால் முகுருஜா நான்காவது சுற்றுக்கு முன்னேறினார். 

வைரஸ் காய்ச்சல் காரணமாக செரீனா வில்லியம்ஸ் விலகியதாகத் தெரிவிக்கப்படுகிறது. 


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment