திமிங்கலத்தால் அதிர்ந்துபோன ஆராய்ச்சியாளர்கள்

பிலிப்பைன்சின் மபினி நகரில் உள்ள கரையொதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றுக்குள் சுமார் 40 கிலோ பிளாஸ்ரிக் கழிவுகள் தேங்கியிருந்ததை கண்டு ஆராய்ச்சியாளர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.

உலகிலுள்ள பெருங்கடல்களில் ஆண்டுக்கு சுமார் 80 லட்சம் டொன் பிளாஸ்ரிக் கழிவுகள் கொட்டப்படுகிறதாம்.

இதே நிலை நீடித்தால் 2050 இல் கடலில் மீன்களைவிட பிளாஸ்ரிக் கழிவுகள் அதிகமாக இருக்கும் என  சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி கழகம் கடந்த ஆண்டு தெரிவித்தது.

இந்த நிலையில் பிலிப்பைன்சின் படாங்காஸ் மாகாணம் மபினி நகர் கடலில் சுமார் 16 அடி நீளம் கொண்ட திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. 

சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள் அந்த திமிலங்கத்தை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

அப்போது அதன் வயிற்றுக்குள் சுமார் 40 கிலோ பிளாஸ்ரிக் கழிவுகள் தேங்கியிருந்ததை கண்டு ஆராய்ச்சியாளர்கள் அதிர்ந்து போய் விட்டனர்.

பிளாஸ்ரிக் கழிவுகள் வயிற்றில் தேங்கியதால் முறையாக இரை உண்ண முடியாமல் தவித்த அந்த திமிங்கலம் நோய்வாய்பட்டு இறந்ததாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment