பொள்ளாச்சி சம்பவம் நாசர் கண்டன அறிக்கை

பொள்ளாச்சி பாலியல்  பலாத்கார சம்பவம், தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில்  திரையுலகினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தென்னிந்திய நடிகர் சங்கமும் கண்டன அறிக்கை வெளியிட்டிருப்பதோடு, பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. 

தலைவர் நாசர் வெளியிட்டுள்ள நடிகர் சங்கம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

 ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் வரும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை  சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்களை விரைவாக கண்டறிந்து, அவர்கள் சமூகத்தில் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் கடுமையான தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என பொலஸிடம் வேண்டுகோள் வைக்கிறோம்.

இதில் நேர்மையாகவும் துணிவுடனும் பொலிஸார் விரைந்து செயல்படுவார்கள் என நம்புகிறோம், அந்த நேர்மைக்கு எப்போதும் தென்னிந்திய நடிகர் சங்கம் துணை நிற்கும் என  உறுதியளிக்கிறோம்.

 ஒரு குறிப்பிட்ட வயது வரை நம் பெற்றோர்களுக்குத் தெரியாமல் எந்த ஒரு உறவுகளையும் நட்புகளையும் யாரும் வைத்துக்கொள்ள வேண்டாம் என இளைய தலைமுறையினரை தென்னிந்திய நடிகர் சங்கம் கேட்டுக் கொள்கிறது. என்றுள்ளது.

Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment