தடையின் பின் களமிறங்கும் ஸ்மித்!ஜெய்ப்பூரில் இன்றிரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள 12 ஆவது ஐ.பி.எல். தொடரின் நான்காவது போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியும்,  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதவுள்ளன. 

ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் ஸ்டீவன் ஸ்மித் விளையாடுகிறார். நேற்றைய போட்டியில் ஐதராபாத் அணிக்கு தடை நீங்கி வந்த வேட்சன் தனது அதிரடியான ஆட்டமூலம் அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றார். 
இந் நிலையில் ஸ்டீவன் ஸ்மித்தும் ஓராண்டு கால தடைக்கு பின்னர் களமிறங்குவதனால், அவர் தனது சிறப்பான ஆட்டத்தால் அணியை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மறுமுணையில் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு கிறிஸ் கெய்ல், லோகேஷ் ராகுல், ஹென்ரிகலை, டேவிட் மில்லர் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளதனால் இப் போட்டியில் அதிரடிக்கு பஞ்சமில்லை.
இரு அணிகளும் இதுவரை 17 போட்டிகளில் மோதியுள்ளன. 
அதில் ராஜஸ்தான் 10 ஆட்டத்திலும், பஞ்சாப் 7 போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளன.
அத்துடன் ஜெய்ப்பூர் மைதானத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி இதுவரை 29 போட்டிகளில் வெற்றியும், 11 போட்டிகளில் தோல்வியும் பெற்றுள்ளது. அதேபோல் பஞ்சாப் அணி இந்த மைதானத்தில் இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடி இருந்தாலும், அவர்களால் ஒரு வெற்றியைக்கூட இங்கு பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Kayathri

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment