யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில் எல்லே போட்டியில் மயிலங்காடு ஞானமுருகன் இளைஞர்கழக அணி கிண்ணம் வென்றது.
கடந்த வாரம் இடம் பெற்ற பெண்களுக்கான இறுதியாட்டத்தில் மயிலங்காடு ஞானமுருகன் இளைஞர்கழக அணியை எதிர்த்து மல்லாகம் சிறி முருகன் இளைஞர்கழக அணி மோதியது.
முதலில் துடுப்பெடுத்து விளையாடிய மயில்காடு ஞானமுருகன் இளைஞர்கழக அணி 2 ஓட்டங்களைப் பெற்றது.
3 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றியென பதிலுக்கு ஆடிய சிறிமுருகன் இளைஞர்கழக அணி 2 ஓட்டங்களைப் பெற்றது.
இரண்டு அணியினரும் தலா 2 ஓட்டங்களைப் பெற்றதால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.
வெற்றியை தீர்மானிப்பதற்காக இரண்டு அணியினருக்கும் மேலதிகமாக 5 பந்துகள் வழங்கப்பட்டன.
இதில் முதலில் துடுப்பெடுதாடிய மயில்ங்காடு ஞானமுருகன் இளைஞர்கழக அணி ஓர் ஓட்டத்தைப் பெற்றது.
2 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றியென பதிலுக்கு துடுப்பெடுத்து விளையாடிய சிறி முருகன் இளைஞர்கழக அணி எதுவித ஓட்டங்களையும் பெறவில்லை.
0 comments:
Post a Comment