அசத்தல் வெற்றி பெற்றது கொல்கத்தா

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

ஐபிஎல்., லீக் தொடரின் ஆறாவது லீக் போட்டியில் கொல்கத்தாவில் நேற்று இடம்பெற்றது.



நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி முதலில், களத்தடுப்பை தெரிவு செய்தது.

தனது 100 ஆவது ஐபிஎல் போட்டியில் களமிறங்கிய சுனில் நரைன், 9 பந்தில் 3 சிக்சர் 1 பவுண்டரி என அதிரடியாக 24 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். 


மற்றொரு ஆரம்ப வீரர் கிறிஸ் லின் (10) களத்தில் நிலைக்கவில்லை.

அடுத்து வந்த ரானா (63) அரைசதம் அடித்து வெளியேற, மறுபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய உத்தப்பா அரைசதம் கடந்தார். 

தொடர்ந்து வந்த ரசல், ருத்ரதாண்டவமாடினார். இதையடுத்து கொல்கத்தா அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 218 ஓட்டங்கள் எடுத்தது.


இந்தப் போட்டியில் 17 சிக்சர்கள் விளாசிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஈடன் கார்டன் மைதானத்தில் அதிக சிக்சர்கள் அடித்துப் புதிய சாதனை படைத்தது.

முன்னதாக அந்த அணி கடந்த 2018 இல் நடந்த டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 15 சிக்சர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.

இலக்கை துரத்திய பஞ்சாப் அணிக்கு ஆரம்ப வீரர்களான ராகுல் , கிறிஸ் கெயில் ஏமாற்றினர்.


தொடர்ந்து வந்த மாயங்க் அகர்வால்  58 ஓட்டங்கள் எடுத்து அரைசதம் அடித்து அவுட்டானார். பின் வந்த சர்ப்ராஜ் கான் 13 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.   

கடைசி நேரத்தில் மந்தீப் சிங் 33 ஓட்டங்களும், மில்லர் 59 ஓட்டங்களும் அணிக்காக பெற்றுக் கொடுத்தனர்.


எவ்வளவு போராடிய போதும் பஞ்சாப் அணி, 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 190 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி தோல்வியை சந்தித்தது.
Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment