ஜி-மெயிலுக்கு வந்த சிக்கல்

உலகெங்கிலும் கூகுள் தளத்திலுள்ள ஜி மெயில் ,கூகுள் ட்ரைவ், ஹேங் அவுட்ஸ் மற்றும் கூகுள் மெப் என்பன பல மணிநேரங்களுக்கு செயலிழந்ததாக பயனாளர்கள் கூகுள் நிறுவனத்திற்கு முறைப்பாடு செய்துள்ளனர்.

பல்வேறு வலைத்தளங்கள், ஜி-மெயில் சிக்கல்கள் மற்றும் தடைகள் கண்காணிக்கப்பட்ட தவறை பயனாளர்கள் இ - மெயில் மூலம் கூகுள் நிறுவனத்திற்கு தெரியப்படுத்தினார்கள்.

இதற்கு பதிலளித்த கூகுள் நிறுவனம் அவர்களது சேவை வலைத்தளத்தின் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

“நாங்கள் ஜி-மெயில் மூலம் ஒரு பிரச்சனையை அறிக்கையிட்டு வருகிறோம். விரைவில் தகவலை  வழங்குவோம். பாதிக்கப்பட்டவர்கள் ஜி மெயிலை பயன்படுத்தலாம். ஆனால் எரர் மெசேஜ் , இணைய வேகம் தாமதம், எதிர்பாராத நடத்தைகள்  என்பவற்றை நாம் அவதானித்துள்ளோம்.

ஜி - மெயில் ஒரு பில்லியனுக்கும்  அதிகமான  பயனாளர்களைக் கொண்டுள்ளது. ஜி  மெயில் செயலிழந்தமையால்  மின்னஞ்சலை அனுப்ப முடியவில்லை. அதற்குத் தவறான செய்திகள் வந்தன. அவையாவன, செய்தி அனுப்ப முடியவில்லை, உங்கள் வலையமைப்பை சரிபார்த்து  மீண்டும் முயற்சிக்கவும், மற்றவை இணைப்புகளைத் திறக்கும் சிக்கல்களை சந்தித்தன போன்ற பிரச்சினைகள்  வந்துள்ளன.

ஜி மெயில் செயலிழந்த போது,

"மின்னஞ்சல்களுக்கு இணைப்புகளை இணைத்தல் அல்லது அணுகல்" உட்பட "பல்வேறு வாடிக்கையாளர்களிடமிருந்து கோப்புகளை அணுகுவதோ அல்லது இணைப்பதில் "அத்துடன் மின்னஞ்சல்களின் அணுகல், சேமித்தல் மற்றும் மின்னஞ்சல்களை அனுப்புதல் போன்றவற்றில்   வாடிக்கையாளர்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டிருந்ததாக  கூகிள் நிறுவனம் தெரிவித்தது.

கூகுள் இயக்ககத்திலிருந்து கோப்புகளை பதிவேற்றுவதற்கும் பதிவிறக்குவதற்கும்,  புகைப்படங்கள் அல்லது இணைப்புகளை  பதிவேற்றுவதில் உள்ள சிக்கல்களும் உள்ளதா எனக் கூகுள் உறுதிப்படுத்தியது.

இருப்பிடத்தின் படங்களைக் காட்டிலும் ஸ்ட்ரீட் வியூ பயன்முறையை ஒரு கறுப்பு நிறத் திரையை பயனர்கள் அவதானிக்க முடிந்தது. Google Maps கூட சிக்கல்களை சந்திக்க நேர்ந்துள்ளது. இந்த சிக்கலானது ஜி.எஸ் சூட் டேஷ்போர்டில் Google ஆல் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் பிரச்சினைக்கான காரணத்தை கூகுள் நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை.

அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, அவுஸ்திரேலியா மற்றும் தென் அமெரிக்காவிலும் பரவலாகப் பேசப்படும் பிரச்சனைகளின் காரணமாக உலகெங்கிலும் பயனர்கள் பாதிக்கப்பட்டனர். அவுஸ்திரேலியாவில் ஹாஷ்டேஹ் #gmaildown பிரபலமடைந்தது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment