கையூட்டு வாங்கிய அதிகாரிக்கு விளக்கமறியல்

கையூட்டுப் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் அதிகாரியை   22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இலஞ்ச ஊழல் திணைக்கள அதிகாரிகளால் நேற்றுக் கைது செய்யப்பட்ட  சந்தேகநபர் கொழும்பு நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில்  முன்னிலைப்படுத்தப்பட்டார்.

மாளிகாகந்தை நீதவானுக்கு வழங்குவதற்காக ஒரு இலட்சம் ரூபா பணத்தை வர்த்தகர் ஒருவரிடம் இலஞ்சமாக கேட்டதுடன், அதில் 80 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

காசோலை மோசடி  தொடர்பில் குறித்த வர்த்தகருக்கு எதிராக நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவிக்காதிருப்பதற்காகவே பொலிஸ் அதிகாரி இலஞ்சம் கேட்டுள்ளதுடன், முன்னதாக 5 இலட்சத்து 13 ஆயிரம்  ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொண்டுள்ளார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment