விஜய் - ராஷ்மிகா இடையில் காதலா

தெலுங்குத் திரையுலகின் நாயகன் விஜய் தேவரகொண்டா. 'கீதா கோவிந்தம்' படத்திற்குப் பின்னர் விஜய் மற்றும் ராஷ்மிகா, 'டியர் காம்ரேட்' படத்தில் ஜோடி சேர்ந்து நடிக்கிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அதில் விஜய், ராஷ்மிகா இருவரும் உதட்டோடு உதடு வைத்து முத்தமிட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ராஷ்மிகா, கர்நாடகாவைச் சேர்ந்தவர். அவருக்கும் கன்னட நடிகரான ரக்ஷித் ஷெட்டி என்பவருக்கும் 2017 இல் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், கடந்த வருடம் இருவரும் பிரிந்து விட்டனர்.


கடந்த வருடம் தான் 'கீதா கோவிந்தம்' படமும் வெளிவந்து சூப்பர் ஹிட்டானது. அதன்பின்னரே இருவரும் பிரிந்தனர்.  அவர்கள் இருவரது பிரிவிலும் விஜய் தேவரகொண்டாவுக்கு தொடர்பு இருப்பதாக அப்போதே செய்திகளும் பரவின.

இப்போது, விஜய்யும், ராஷ்மிகாவும் 'டியர் காம்ரேட்' படத்தில் முத்தம் கொடுத்து நடிக்கும் அளவுக்கு நெருக்கமாகி உள்ளனர் என சில நாட்களாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டு வருகிறார்கள்.


இருவரும் தற்போது காதலிக்க ஆரம்பித்துள்ளார்களா என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். 

Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment