நியூஸிலாந்தின் துப்பாக்கிச் சூடு ; பொலிஸார் எச்சரிக்கை

நியூஸிலாந்தின் இரு மசூதிகளில்  இனந்தெரியாத சிலரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 49 பேர் உயிரிழந்ததாக அந் நாட்டுப் பிரதமர் ஜெசிந்தா  அறிவித்துள்ளார்.

கிரைஸ்ட் சர்ச்சில் உள்ள அல் நூர் மசூதி மற்றும் ஹக்லி எனும் பூங்காவுக்கு அருகே உள்ள மசூதிக்குள் நேற்றுப் புகுந்த நபர்கள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.


இன்னும் எத்தனை துப்பாக்கிதாரி கள் உள்ளனர் என்பது உறுதி செய்யப்படவில்லை என்றாலும், துப்பாக்கிதாரிகளில் ஒருவர் ஆஸ்திரேலியர் என்பதும், அவர் குடியேற்றத்துக்கு எதிரான கொள்கையைக் கொண்டவர் என்றும் கூறப்படுகிறது.

துப்பாக்கித்தாரி தாக்குதல் தொடுக்கும்போது எடுத்ததாகக் கூறப்படும் காணொலி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பங்களாதேசின் கிரிக்கெட் அணியினர் ஹக்லி பூங்காவுக்கு அருகே உள்ள மசூதிக்குத் தொழுகைக்குச் செல்ல முயன்றபோதே இந்தத் தாக்குதல் நடந்தது.


அவர்கள் அங்கிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை என்பதால், குறித்த மசூதியில் நண்பகல்  தொழுகையில் முஸ்லிம்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இதன்போதே இந்தச் சூட்டுச் சம்பவம் நடந்தது.

துப்பாக்கிச் சூடு 10 முதல் 15 நிமிடங்கள் வரை நீடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 49 பேர் கொல்லப்பட்டதாக முதல் கட்டத் தகவல் வெளியாகியிருந்தாலும் இது மிகப்பெரிய தாக்குதலாக இருப்பதால், சாவுகள் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. 


இச் சம்பவத்தால் அந்தப் பகுதி முழுதும் பதற்றமான சூழல் நிலவுவதால், பாடசாலைகள், கல்லூரிகளை மூடுமாறும், யாரையும் வெளியே நடமாட வேண்டாம் என்று பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment