தாம் ஏமாற்றமடைவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு!
வட கொரியா தமது ஏவுகணை ஏவுதளத்தை மீளக்கட்டமைப்பதை உறுதிப்படுத்தினால் தாம் ஏமாற்றமடைவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளது.
வடகொரியா தமது ஏவுகணை ஏவுதளங்களை மீளக்கட்டமைப்பதாக நேற்றைய தினம் செய்மதி புகைப்படங்கள் வெளியாகிருந்தன.
அமெரிக்க ஜனாதிபதிக்கும், வடகொரிய தலைவருக்கும் இடையிலான இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை நிறைவடைந்து ஒரு வார காலத்தின் பின்னர் குறித்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
எனினும் இந்த தகவல் உண்மையானவை என்று முற்கூட்டியே கூற முடியாது என்று டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இதனை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்த தகவல் உண்மையாக இருந்தால் தாம் பெரும் ஏமாற்றத்துக்கு ஆளாகக்கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இந்த பிரச்சினை நிரந்தரமாக தீர்க்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடகொரிய தலைவருக்கும் அமெரிக்க ஜனாதிபதிக்கும் இடையில் வியட்நாமில் நடைபெற்ற மாநாடு தோல்வியில் நிறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment