பாகிஸ்தானில் பயங்கரம் ; 14 பேர் சாவு

பயணிகள் பேருந்தை நிறுத்தி பயங்கரவாதிகள் சரமாரியாக சுட்டதில் 14 பேர் பரிதாபகரமாக உயிரிழந்தனர். 

இந்தச்சம்பவம், பாகிஸ்தான், மக்ரான் கடலோர நெடுஞ்சாலையில் நடந்துள்ளது.

பலூசிஸ்தான் மாகாணத்தில் ஒர்மாரா என்ற பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று கராச்சி நோக்கி சென்றுகொண்டிருந்தது. 

பேருந்து மக்ரான் கடலோர நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது துணை ராணுவப்படை உடையணிந்த சிலர் பேருந்தை  வழிமறித்து,  துப்பாக்கியால் சரமாரியாகக் சுட்டனர். 

 சம்பவத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழக்க,  அந்தக் கும்பல் தப்பியோடிவிட்டது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்துக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. 

இதனிடையே பயணிகள் மீதான தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பலூசிஸ்தான் மாகாண முதல்வர் ஜாம் கமால் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment