நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டுவரும், விசேட நடவடிக்கைகளில் இதுவரை குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 78 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்
இந்தத் தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர வெளியிட்டுள்ளார்.
தற்கொலை குண்டுதாரிகள் மறைந்திருக்கப் பயன்படுத்திய 5 பாதுகாப்பு இல்லங்களும் புலனாய்வுப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாணந்துறை – சரிக்காமுல்ல, தெஹிவளை, கொள்ளுபிட்டி, வத்தளை மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் இந்த வீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment