ராகுல் டிராவிட்டுக்கு வந்த சோதனை

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித்தலைவரும், தேர்தல் ஆணையத்தின் விளம்பர தூதருமான ராகுல் டிராவிட்  தேர்தலில் வாக்களிக்க முடியாது என தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. ஆனால் இந்த தேர்தலில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் ராகுல் டிராவிட் வாக்களிக்க முடியாது என தெரிய வந்துள்ளது.

கர்நாடக மாநில தேர்தல் ஆணையத்தின் விளம்பர தூதராகவும் உள்ள ராகுல் டிராவிட், கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது கர்நாடக மாநிலத்தில் இந்திரா நகர் எனும் பகுதியில் வசித்து வந்தார்.

தற்போது சாந்தி நகர் பகுதியில் வசித்து வருகிறார். வேறு பகுதிக்கு அவர் மாறிய பின்னர், அந்த இடத்தின் முகவரியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யவில்லை. இதனத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் சார்பில் அதிகாரிகள் அவரது இல்லத்திற்கு சென்றுள்ளனர்.

இருமுறை அவர்கள் சென்றபோதும் ராகுல் டிராவிட் வெளிநாடு சென்றிருந்ததால், அவரது வீட்டில் நுழைய அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.  அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில் தான் டிராவிட்டின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சிறப்பு தேர்தல் தலைமை அதிகாரி ரமேஷ் கூறுகையில்,

வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க, கடந்த மார்ச் 16ஆம் திகதிக்குள் படிவம் 6 சமர்ப்பித்திருக்க வேண்டும். அப்படி சமர்ப்பிக்காவிட்டால் எதுவும் செய்ய முடியாது. ராகுல் சமர்ப்பிக்க தவறிவிட்டார். எனவே அவரது பெயர் நீக்கப்பட்டது -என்றார்.Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment