மன்னார் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் கடும் சோதனைகள் மற்றும் தேடுதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
உப்புக்குளம், நளவன் வாடி, பள்ளிமுனை, மூர்வீதி ஆகிய கிராமங்களில் பல நூற்றுக்கணக்கான இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து வீதிகளை மறித்து சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அப் பகுதி கிராமங்களில் உள்ள வீடுகளுக்குச் செல்லும் படையினர் வீட்டில் உள்ள உடமைகளை முழுமையாகச் சோதனைக்கு உட்படுத்தியதோடு, வீட்டில் உள்ளவர்களின் விபரங்களையும் பரிசீலினை செய்து வருகின்றனர்.
பள்ளிமுனை-உப்புக்குளம் பிரதான வீதியில் வீதித் தடைகள் அமைக்கப்பட்டு சோதனைகளும் இடம் பெற்று வருகின்றது.
0 comments:
Post a Comment