விண்வெளியில் செயற்கைக்கோளை அழித்த இந்தியாவின் நடவடிக்கைக்கு நாசா கவலை வெளியிட்டுள்ளது.
ஏ-சாட் ஏவுகணை மூலம் விண்வெளியில் இந்தியாவால் தகர்க்கப்பட்ட செயற்கைக்கோள் 400 துண்டுகளாக சிதறியுள்ளது.
இந்தியாவின் இந்தச் செயலால் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்து அதிகரித்துள்ளது.
இந்திய செயற்கைக்கோள்களை பாதுகாக்கும் வகையில், மற்ற எதிரிநாட்டு செயற்கைக் கோள்களை தாக்கி அழிக்கும் ஏ-சாட் ஏவுகணைச் சோதனையை கடந்த 27ஆம் திகதி டி.ஆர்.டி.ஓ நடத்தியது.
இத் திட்டத்துக்கு மிஷன் சக்தி திட்டம் என பெயரிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment