தெலுங்கில் சிரஞ்சீவியுடன் இணைந்து சைரா நரசிம்ம ரெட்டி என்கிற படத்தில் நடித்து முடித்துள்ள விஜய்சேதுபதி 'மார்க்கோனி மத்தாய்' என்கிற படம் மூலம் முதன்முதலாக மலையாளத்திலும் அடியெடுத்து வைத்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதமே இது குறித்து தகவல் வெளியாகியிருந்தது. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இரு முக்கிய கேரக்டர்களில் விஜய்சேதுபதியும், நடிகர் ஜெயராமும் முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர். கதாநாயகியாக அங்கமாலி டைரீஸ் புகழ் அன்னா ரேஷ்மா ராஜன் நடிக்கிறார்
சனில் கலத்தில் என்கிற அறிமுக இயக்குனர் தான் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப்படத்தில் ரேடியோவும் ஒரு முக்கிய கதாபாத்திரமாக இடம்பெறுகிறதாம்.
0 comments:
Post a Comment