தற்கொலை தாரிகளின் சடலங்களை ஏற்க மாட்டோம்

இலங்கைத் தற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடைய தீவிரவாதிகளின் சடலங்களைப் பொறுப்பேற்கமாட்டோம் இவ்வாறு  அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை  அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இந்த விடயம் கூறப்பட்டது.

தீவிரவாதிகளுக்கும் இஸ்லாத்திற்கும் எதுவிதத்திலும் தொடர்புகள் இல்லை.   அவர்களின் சடலங்களை முஸ்லிம் மைய்யவாடிகளில் அடக்கம் செய்ய இடமளிக்கமாட்டோம்.

இஸ்லாம், தீவிரவாதத்திற்கோ, கொலைகள் செய்வதற்கோ, அப்பாவி மக்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்வதற்கோ ஒரு போதும் அனுமதிப்பதில்லை. அது மிகப்பெரும் பாவம் ஆகும்.

கிறிஸ்தவ ஆலயங்களிலும், பல்வேறு இடங்களிலும் கிறிஸ்தவ சகோதரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களை முஸ்லிம் சமூகம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

குற்றவாளிகள் சரியாக அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு உச்சகட்ட தண்டனைகள் வழங்கப்படவேண்டும்.  எனவும் வலியுறுத்தப்பட்டது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment