நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் வீசா இல்லாமல் தங்கியிருந்த 13 வௌிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
கல்கிஸ்ஸ - வடரப்பல பிரதேசத்தில் 6 பேரும் மற்றும் வெலிகட பிரதேசத்தில் 4 பேரும் கைது செய்யப்பட்ட நிலையில் , அவர்கள் அனைவரும் நைஜீரியா பிரஜைகள் எனத் தெரியவந்துள்ளது.
நவகமுவ பகுதியில் ஈரான் நாட்டவரும் , ரத்மலானை பகுதியில் இந்திய நாட்டவர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
தெஹிவளை - நெதிமால பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் 38 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment