பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போர் விமானமொன்று ராஜஸ்தானின் தெற்கு பகுதியான சிரோஹியில் விழுந்து விபத்துக்குள்ளனது.
இந்திய விமானப் படைக்குச் சொந்தமான குறித்த மிக்-27 யுபிஜி ரக போர் விமானத்தின் விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
ஜோத்பூரின் உடர்லாயில் உள்ள இந்திய விமான படைத்தளத்திலிருந்து நேற்றுக் காலை வழக்கமாக விமானம் பயிற்சிக்காக புறப்பட்டுச் சென்றது. அப்போது ஜோத்பூரிலிருந்து 120 கி.மீ தொலைவில் சிரோஹி அருகே ஷோகான்ஜ் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எஞ்சினில் ஏற்பட்ட கோளாறினால் திடீரென செயலிழந்தது.
கட்டுப்பாட்டை இழந்த விமானம் இன்று காலை 11.45 மணி அளவில் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. விபத்து தொடர்பில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மிக்-27 1980 இன் முற்பகுதியில் இந்தியா வாங்கிய இந்தப் போர் விமானம் 1999 ஆம் ஆண்டு நடந்த கார்கில் போரில் பயன்படுத்தப்பட்டது. இலக்குக்களைத் துல்லியமாகத் தாக்கும் சக்தி வாய்ததாகும்.
இதேபோல் ராஜஸ்தான் ஜெய்சால்மர் பகுதியில் கடந்த மாதம் மிக்-27 ரக போர் விமானம் ஒன்று பயிற்சின்போது விபத்துக்குள்ளானது. அந்த விபத்தின் போதும் அதனை இயக்கிய விமானி பத்திரமாக உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment