பாலியல் துர்நடத்தை வழக்கில் ஆஸ்திரேலிய வீரர்

உறக்கத்தில் இருந்த பெண்ணை பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்தியதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு தற்போது உறுதியாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 23 வயது அலெக்ஸ் ஹெப்பர்ன் என்ற இளைஞர் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்பதற்காக 2013 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்குச் சென்றார்.

அங்கு வொர்சஸ்டர்ஷைர் கவுன்டி அணிக்காக கிரிக்கெட் விளையாடி வந்த இவர், சிட்டி சென்டர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி இரவு நண்பர்களுடன் வெளியில் சென்று வந்த இவர், அண்டை குடியிருப்பில் தூக்கத்தில் இருந்த பெண்ணை, பாலியல் துர்நடத்தை செய்ததாக முறைப்பாடு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண் யார் என்பது தொடர்பில் எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.

இது தொடர்பான வழக்கு, மத்திய இங்கிலாந்தில் உள்ள வொர்சஸ்டர் கிரவுன் நீதிமன்றில் நடந்து வந்தது.

விசாரணை முடிவில், அவர் பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. அவருக்கான தண்டனை வரும் 30 ஆம் திகதி அறிவிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment