வவுனியாவில் இளைஞர் அணி மாநாடு

இலங்கை தமிழரசு கட்சியின் வடக்கு, கிழக்குப் பகுதியை சேர்ந்த இளைஞர் அணி மாநாடும் நிர்வாக தெரிவும் இன்றையதினம் இடம்பெற்றது.

வவுனியா நகரசபை மண்டபத்தில்  தமிழரசு கட்சியின் செயலர் துரைராஜசிங்கம் தலமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

மாநாட்டில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், எஸ்.சிவமோகன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, துரைரத்தினசிங்கம், ஈ.சரவணபவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரின் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் இவ் இளைஞர் அணி மாநாடு நடைபெற்றது.



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment