"ஒரு வடக்கன் செல்பி" படத்தின் மூலம் ஹீரோயின் ஆனவர் மஞ்சிமா மோகன். "அச்சம் என்பது மடமையடா" படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார்.
தொடர்ந்து, "சத்ரியன், இப்படை வெல்லும்" படங்களில் நடித்தார். தற்போது, "ஜெயலலிதா வேடத்தில் நடிக்க பொருத்தமானவள் நான்தான்" என்கிறார் மஞ்சுமா. இதுகுறித்து அவர் கூறியதாவது:
ஜெயலலிதா பயோபிக்கில் இப்போது பலர் நடித்துக் கொண்டிருந்தாலும், ஜெயலலிதா வேடத்திற்கு பொருத்தமானவள் நான் தான். இதை நான் சொல்லவில்லை. இயக்குனர் கௌதம் மேனன் தான் சொன்னார்.
தற்போது அவர் இயக்கி வரும் வெப் சீரிசில் ஜெயலலிதாவாக நடிக்க என்னைத்தான் முதலில் அழைத்தார். அப்போது நான் 3 படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் அவர்கள் கேட்ட தேதியை என்னால் கொடுக்க முடியவில்லை.
அதனால் நடிக்க முடியாமல் போனது. ஜெயலலிதாவின் முகச் சாயல் எனக்கு இருப்பதாக பலரும் சொல்கிறார்கள். வாய்ப்பு கிடைத்தால் நானும் ஜெயலலிதா பயோபிக்கில் நடிப்பேன் என்கிறார் மஞ்சுமா மோகன்.
0 comments:
Post a Comment