சூர்யாவின் சூரரைப் போற்று

ஓராண்டு படங்கள் வெளியாகவில்லை என ஏங்கி போய் இருந்த சூர்யா ரசிகர்களுக்கு இந்தாண்டு கொண்டாட்டமான ஆண்டு.

இந்தாண்டு அவரது நடிப்பில் என்ஜிகே., காப்பான் ஆகிய இரண்டு படங்கள் வெளியாவது உறுதியாகிவிட்டது.

இந்த படங்களை தொடர்ந்து சுதா கோங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் சூர்யா.  கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். சூர்யாவின் 38 ஆவது படமாக உருவாகும் இப் படத்தின் படப்பிடிப்பு கடந்தவாரம் ஆரம்பித்தது.

ஜிவி பிரகாஷ் இசையமைக்க, சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரிக்கிறது. படத்திற்கு சூரரைப் போற்று என தலைப்பு வைத்து, பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment