இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பில் நடிகை காஜல் அகர்வால் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, நடிகை காஜல் இதுப்பற்றி டுவிட்டரில் கூறியிருப்பதாவது, இலங்கை எனக்கு மிகவும் பிடித்தமான நாடு. அதனால் அங்கு அடிக்கடி செல்வேன். குண்டுவெடிப்பு நடந்த விடுதிகளில் ஒன்றில் தான் நானும் தங்குவேன்.
உயிரிழந்தவர்களுக்காக ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். அவர்களின் குடும்பத்தாருக்கு இரங்கலைத் தெரிவிக்கிறேன்.
நாம் எந்த மாதிரியான உலகில் வாழ்கிறோம், ஏன் இத்தனை வெறுப்பு? இந்த சம்பவம் மிகுந்த வேதனையையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment