சங்குகளுடன் ஒருவர் கைது

சங்குகளைத் தம்வசம் வைத்திருந்த சந்தேகநபரொருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் சிலாவத்துறை பிரதேசத்தில் மன்னார் குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் சிலாவத்துறை பிரதேசத்தைச் சேர்நத 72 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவரிடமிருந்து, 50 மில்லி மீற்றரை விடவும் குறைவான நீளமுடைய  376 சங்குகள் கைப்பற்றப்பட்டதாகவும். அவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சிலாவத்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment