மாகாண சபைகளுக்கு தேர்தல்களை நடத்துவது குறித்து அரசாங்கத்துடனோ அல்லது தேர்தல்கள் ஆணையகத்துடனோ பேச்சுவார்த்தை நடத்துவது பயனற்ற விடயம் என்று நீதியானதும் நேர்மையானதுமான தேர்தல்களுக்கான அமைப்பு பவ்ரல் தெரிவித்துள்ளது.
7 மாகாண சபைகளின் காலம் முடிவடைந்துள்ள நிலையில் பல மாதங்களாக தேர்தல்கள் நடத்தப்படாமல் இருந்துவருகிறது.
இந்த நிலையில் தேர்தல்களை நடத்துவதற்கான பொறுப்பு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கே இருப்பதாகவும், இதுபற்றி எவருடனும் பேசுவது பயனற்றது என்ற முடிவு சுதந்திரமான தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு கூட்டத்தில் வியாழனன்று முடிவு செய்யப்பட்டதாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோகண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
0 comments:
Post a Comment