ஐபிஎல் அணிகளின் புள்ளிகள்

இந்தியன் ப்ரிமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் றோயல் அணிக்கு  எதிராக  இடம்பெற்ற போட்டியில், டெல்லி கெப்பிரல்ஸ் அணி 6 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றது.

நேற்றிரவு நடந்த இந்தப் போட்டியில்  ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 191 ஓட்டங்களைப் பெற்றது.

ராஜஸ்தான் அணி சார்பில், ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அஜின்க்யா ரஹானே ஆட்டமிழக்காமல் 105 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

இதையடுத்து, 192 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய டெல்லி கெப்பிரல்ஸ் அணி, 19.2 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

டெல்லி அணி சார்பில் ரிஷப் பாண்ட், ஆட்டமிழக்காமல் 78 ஓட்டங்களை அதிகூடுதலாக பெற்றுக்கொடுக்க,  இந்த வெற்றியின் ஊடாக 14 புள்ளிகளைப் பெற்றுள்ள டெல்லி அணி ஐ.பி.எல் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

சென்னை அணி, 14 புள்ளிகளுடன் 2 ஆம் இடத்திலும், மும்பை அணி, 12 புள்ளிகளுடன் 3 ஆம் இடத்திலும், ஐதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகள், தலா 10 புள்ளிகளுடன் 4ஆம் மற்றும் 5ஆம் இடங்களிலும் உள்ளன.

கொல்கத்தா அணி, 8 புள்ளிகளுடன் 6ஆம் இடத்திலும், இராஜஸ்தான் றோயல்ஸ் மற்றும் பெங்களுர் றேயல் செலஞ்சர்ஸ் அணிகள், தலா 6 புள்ளிகளுடன் 7ஆம் மற்றும் 8ஆம் இடங்களிலும் உள்ளன.




Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment