பல்கலை பதிவுகள் ஒத்தி வைப்பு

நாட்டின் பல பகுதிகளில்  இடம்பெற்ற  குண்டு வெடிப்பையடுத்து, ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக யாழ்.பல்கலைக்கழக புதுமுக மாணவர்களுக்கான பதிவுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குத் தெரிவு செய்யப்பட்டு எதிர்வரும் 29 ஆம் திகதி  முதல் பதிவுகளை மேற்கொள்வதற்காக அழைக்கப்பட்டவர்களுக்கான பதிவு நடவடிக்கைகள் ஆரம்பமாகவிருந்தன.

இந்த நிலையில் நாட்டின் அசாதாரண நிலையையடுத்து, மறு அறிவித்தல் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், பதிவுக்கான புதிய திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் யாழ். பல்கலைக் கழகப் பதிவாளர் வி. காண்டீபன் அறிவித்துள்ளார். 


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment