நாய்களைப் பராமரிக்கும் நோக்குடன் நாய்கள் சரணாலயம் ஒன்று பளை இயக்கச்சி பகுதியில் திறந்து வைக்கப்படவுள்ளது.
வீதிகளில் கட்டாக்காலி நாய்களாக திரியும் பராமரிக்கும் நோக்குடன் சிவபூமி நாய்கள் பராமரிப்பு நிலையம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வடமாகாண ஆளூநர் கலாநிதி சுரேன் ராகவனால் திறந்து வைக்கப்படவிருக்கிறது.
செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுருகன் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் அ. அருமை நாயகம் , யாழ்.மாவட்ட செயலர் நா. வேதநாயகன் , வடமாகாண ஆளுநரின் செயலர் இ. இளங்கோவன் , பளை பிரதேச செயலர் திருமதி. ப. ஜெயராணி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபைத் தவிசாளர் சு. சுரேன் மற்றும் சரணாலயம் நிலம் அன்பளிப்புச் செய்த செல்வி. பே. ரோகினி ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.
0 comments:
Post a Comment