கங்குலியால் நொறுங்கிய நக்மாவின் இதயம்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக கங்குலி இருந்தபோது, அவரும் நடிகை நக்மாவும் காதலிப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது.

கங்குலி விளையாடும் போட்டிகளைப் பார்ப்பதற்கு நக்மா தவறாமல் வந்துவிடுவார். இருவரும் அவ்வப்போது பொது இடங்களுக்கும் ஒன்றாகச் சென்றனர்.

இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் செய்திகள் கசிந்த  நிலையில் இருவரும் பிரிந்தனர்.

இந்த நிலையில் 18 ஆண்டுகள் கழித்து இதுகுறித்து மனம் திறந்துள்ள நடிகை நக்மா. கங்குலிக்கும் எனக்கும் இடையேயான நட்பு மிகவும் அழகானது. 

எங்கள் இருவருக்குமான நட்பு நெருக்கத்தில் இருந்த சமயத்தில் அவரது விளையாட்டு பாதிக்கப்பட்டுவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.

ஆனால், எங்களுடைய நட்புதான், கங்குலியின் ஆட்டத்தைப் பாதித்தது என்று பத்திரிகைகளில் எழுதப்பட்டது. இதனால் இதயம் நொறுங்கியது.

மற்றவர்களின் பார்வை எங்களைப் புண்படுத்தியதால், இருவரும் சேர்ந்து பேசி பிரிவது என்று முடிவெடுத்துப் பிரிந்துவிட்டோம் என கூறியுள்ளார்.Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment