நாட்டில் நேற்றையதினம் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளையடுத்து, மேதினக் கூட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலர் அகில விராஜ் காரியவசம் இதனை உறுதிப்படுத்தினார்.
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஐக்கிய தேசியக்கட்சியின் மேதினப் பேரணி மற்றும் கூட்டம் கொழும்பில் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதேவேளை, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம் ஆகியவற்றின் மேதினக் கூட்டங்களும், பேரணிகளும் இரத்துசெய்யப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment