விண்வெளி வரலாற்றில் முதன்முறையாக அதிசயம் ஒன்று நிஜமாகியுள்ளது.
விண்வெளியில் கருந்துளைகள் அமைந்திருப்பதும், அதிலிருந்து புவி ஈர்ப்பு அலைகள் வெளிப்படுவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். எனினும் இவற்றை முழுமையாக ஆய்வு செய்ய முடியவில்லை.
இந்த நிலையில் இந்த கருந்துளையின் புகைப்படம் முதல் முறையாக தற்போதுதான் வெளியாகியுள்ளது. இதன் உருவம் 40 பில்லியன் கிலோமீட்டர் குறுக்கு வட்டத் தோற்றமுடையது. இது பூமியின் அளவை விட 3 மில்லியன் அளவுக்கு பிரமாண்டமானது.
ஒளியை கூட விடாது விஞ்ஞானிகள் இதை மான்ஸ்டர் (Monster) என்று வியப்புடன் குறிப்பிடுகிறார்கள்.
ஹார்வார்ட்-ஸ்மித்சோனியான் மையத்தினை சேர்ந்த குழு 8 தொடர்புடைய தொலை நோக்கிகளைப் பயன்படுத்தி இந்தப் புகைபடத்தை எடுப்பதில் வெற்றி கண்டுள்ளது.
இதன் ஆய்வறிக்கை இன்று மாலை வெளியாகவுள்ளதாகவும், கருந்துளை வெளியிடும் கதிர்வீச்சுகளை வரைபடமாக்கி அதனை வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment