நந்தினியாகும் ஐஸ்வர்யா

எழுத்தாளர் கல்யின் படைப்பு பொன்னியின் செல்வன். இதனை எம்ஜிஆர்., சிவாஜி, கமல் போன்ற நடிகர்கள் எல்லாம் படமாக எடுக்க முயற்சித்துக் கைவிட்டனர். இந்த நிலையில், மணிரத்னம் இதை கையில் எடுத்திருக்கிறார். 

மணிரத்னத்தின் கனவுப்படமான பொன்னியின் செல்வன் பட வேலைகள் முழு மூச்சில் நடைபெற்று வருகின்றன. ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, மோகன் பாபு, அமிதாப் பச்சன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் இதில் நடிக்கவிருக்கின்றனர். 

பொன்னியின் செல்வனின் மிக முக்கிய கேரக்டரான குந்தவி  கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் இப் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய்யும் நடிக்கவுள்ளாராம்.

இவர் பொன்னியின் செல்வனில் இடம்பெற்ற மற்றொரு முக்கிய கதாபாத்திரமான நந்தினி வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment