அட்லீ மீது முறைப்பாடு

இயக்குநர் அட்லீ, மூன்றாவது முறையாகவும் விஜய்யை வைத்து படம் இயக்கி வருகிறார். விஜய்யின் 63 ஆவது படமாக உருவாகும் இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். 

கால்பந்தாட்ட கதையில் உருவாகும் இப்படத்தில் விஜய், பயிற்சியாளராக நடிக்கிறார்.

இந்த நிலையில் இயக்குநர் அட்லீ மற்றும் அவரது உதவி இயக்குநர்கள் மீது துணை நடிகை கிருஷ்ணதேவி என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

நான் சினிமா துறையில் துணை நடிகையாக இருக்கிறேன். தனியார் பிலிம் சிட்டில் அட்லீ இயக்கும் படத்தில் பணிபுரிந்தேன். படப்பிடிப்பில் அட்லீ மற்றும் அவரது உதவி இயக்குநர்கள் மிகவும் மோசமாக நடந்து கொண்டனர். 

தரக்குறைவான வார்த்தைகளை பேசி என்னை பணி செய்ய விடாமல் வெளியேற்றிவிட்டனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். என்று அவர் தனது  மனுவில் தெரிவித்துள்ளார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment