அஜித்துக்கு ஆசைப்படும் விவேக்

காமெடி நடிகரான  விவேக் பரபரப்பான  கதை ஒன்றை உருவாக்கி வைத்திருக்கிறாராம். அது விவசாயியின் கதை என்றும் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில், மிகச் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் அந்த கதையின் நாயகனாக நடிகர் அஜித் நடிக்க வேண்டும் என்று  விவேக் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து விவேக் கூறியிருப்பதாவது,

நடிகர் அஜித், காமெடி படம் ஒன்றில் நடித்து வெகு நாட்களாகிறது. நான் உருவாக்கி வைத்திருக்கும் விவசாயி கதை, பாதி வரையில் காமெடியாகவே நகரும். 

பின், சீரியசாகி முடிவில் மிகப் பெரிய மெசேஜ் ஒன்றை சமூகத்துக்குச் சொல்லும். அந்தப் படத்தில் அஜித் நடித்தால், அது மிகச் சிறப்பாக வரும் என்பது என்னுடைய எண்ணம். ஆனால், அது நிறைவேறுமா எனத் தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment