ஷீரடி பாபாவுக்கு இசையமைத்த ரஹ்மான்

ஷீரடி சாய்பாபா பற்றிய பக்திப் பாடல் ஒன்றுக்கு இசையமைத்துள்ளார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், 

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு அந்தப்பாடல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நேற்று யு-டியூபில் வெளியிடப்பட்டது. 

கன்னடத்திலும் இந்தப் பாடலை வெளியிடலாமே என ரசிகர் ஒருவர் டுவிட்டரில் கேட்டதற்கு, வேண்டுகோள் ஏற்கப்பட்டது என ஏ.ஆர்.ரஹ்மான் அந்த ரசிகருக்கு பதிலளித்திருக்கிறார். அதனால், விரைவில் கன்னடத்திலும் பாடலை எதிர்பார்க்கலாம்.

இந்து மதத்திலிருந்து முஸ்லிம் மதத்திற்கு மாறிய ஏ.ஆர்.ரஹ்மான் சினிமாவில் பக்திப் பாடல்களுக்கு இசையமைக்க மாட்டார் என்று  பல ஆண்டுகளாகவே ஒரு தகவல் உண்டு. 

இப்போது ஷீரடி சாய்பாபா பற்றிய பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருப்பது பாபா பக்தர்களால் பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

இந்தப் பாடல் பற்றி ரஹ்மான் கூறுகையில், “அவர்கள் சொல்வதைப் போல, நீங்கள் பாடலை கம்போஸ் செய்வதில்லை, பாடல்தான் உங்களை கம்போஸ் செய்கிறது. இந்தத் தமிழ்ப் புத்தாண்டை சாய் ஷீரடி சாய் உடன் கொண்டாடுங்கள்,” எனக் கூறியுள்ளார்.Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment