அரசின் நடவடிக்கையே வரவு-செலவு தோற்கடிப்புக்குக் காரணம்

சமகால அரசு பொதுமக்களுக்கு உண்மையான நிவாரணத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டதன் காரணமாகவே அரசினால் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற முடிந்தது. இவ்வாறு காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராய்சி தெரிவித்துள்ளார்.

விடயம் தொடர்பில் அவர் தெரிவித்ததாவது,

எதிர்க்கட்சி  நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்தைத் தோற்கடிப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இருப்பினும் அரசு பொதுமக்களுக்கு உண்மையான நிவாரணத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதனால் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற முடிந்தது.

அரசு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஆறு சதவீதத்தை கல்விக்காக ஒதுக்கியுள்ளது. ”அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” என்ற திட்டத்தின் கீழ் அனைத்துப் பாடசாலைகளுக்கும் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. 

சுரக்ஷா காப்புறுதி, மாபொல புலமைப் பரிசில் ஆகியனவையும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அனைத்துப் பாடசாலைகளிலும் நிலவிய இயற்கைக் கழிவறைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது, பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் ஆரம்ப பிரிவுகளில் உள்ள மாணவர்களுக்கு ஒரு கோப்பை பாலை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வடக்கு மக்களுக்கு சிங்களமொழியையும், தெற்கு மக்களுக்கு தமிழ் மொழி அறிவையும் மேம்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும். இதன் மூலம் இரு தரப்பினர்களுக்கு இடையில் நம்பிக்கையை மேலும் கட்டியெழுப்ப முடியும் என்றார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment