மகளின் தாக்குதலில் தாய் சாவு

இளம்பெண்ணொருவர்  மேற்கொண்ட தாக்குதலில் அவரது தாயார் உயிரிழந்துள்ளதுடன் அவரது தந்தை காயமடைந்துள்ளார். 

இந்தச் சம்பவம் கஹவத்தை -மடலகம பிரதேசத்தில் நடந்துள்ளது.

குறித்த  தாக்குதலில் படுகாயமடைந்த தாய் மற்றும் தந்தை  கஹவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தாய் சிகிச்சை பயனின்றி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 

கஹவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இளம்பெண் கைது செய்யப்பட்டதுடன், அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து  வருகின்றனர். 
Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment