அமெரிக்காவில் எச்1பி விசா கட்டணத்தை உயர்த்த பரிந்துரை

அமெரிக்காவில் எச்1பி விசா கட்டணத்தை உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களுக்கு இந்தியா, சீனா உள்ளிட்ட ெவளிநாடுகளில் இருந்து ஐடி உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இதற்கு அவர்களுக்கு எச்1பி விசா வழங்கப்படுகிறது. இதைக்கொண்டு வெளிநாட்டினர் அமெரிக்காவில் 6 ஆண்டுகள் பணியாற்றலாம். ஆனால் நிரந்தரமாக தங்க முடியாது.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டினர் எச்1பி விசா மூலம் அமெரிக்காவுக்கு வருவதாகவும், எப்போதும் 6.50 லட்சம் எச்1பி விசா வைத்துள்ள வெளிநாட்டினர் அமெரிக்காவில் உள்ளதாகவும் பெரிட்பார்ட் என்ற இணையதளம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் எச்1பி விசா விண்ணப்பத்துக்கான கட்டணத்தை உயர்த்த அமெரிக்கா பரிந்துரை செய்துள்ளதாக அந்த நாட்டின் தொழிலாளர் துறை அமைச்சர் அலெக்சாண்டர் அகோஸ்டா தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 1ம் தேதி தொடங்கும் 2020ம் நிதி ஆண்டுக்கான தொழிலாளர் துறையின் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யும் முன் எம்பிக்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் அகோஸ்டா கூறுகையில், ‘‘தொழிலாளர் துறையின் நிதியை அதிகரிக்கும் நோக்கில் எச்1பி விசாவுக்கான விண்ணப்ப கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.
இதன் மூலம் அமெரிக்க தொழிலாளர்களின் வேலை பாதுகாக்கப்படும். மேலும் அமெரிக்கர்களுக்கு தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சி அளிக்கப்படும்’’ என்றார்.
விசா கட்டணம் எவ்வளவு உயரும் என்ற தகவலை அவர் வெளியிடவில்லை. இந்த கட்டண உயர்வால் அமெரிக்காவில் கிளைகள் வைத்துள்ள இந்திய ஐடி நிறுவனங்களுக்கு கூடுதல் நிதிச் சுமை ஏற்படும். இந்த கட்டண உயர்வு அமெரிக்காவுக்கு வேலை தேடிச் செல்லும் இந்தியர்களை பாதிக்கும் என கூறப்படுகிறது.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment