சீனாவில் ஸ்ரீதேவி படத்திற்கு கிடைத்த வரவேற்பு - ஒரே நாளில் ரூ.10 கோடி

இந்திய படங்களுக்கு சமீபகாலமாக உலக அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது. ஹாலிவுட் படங்களைபோல் அனைத்து நாடுகளிலும் வசூல் குவிக்கின்றன. இந்திய படங்கள் மீது உலக நாடுகளின் கவனம் திரும்ப காரணமாக அமைந்த முதல் படம் பாகுபலி-2. இந்த படத்தின் வசூல் சர்வதேச அளவில் ரூ.1,000 கோடியை தாண்டியது.

தற்போது சீனர்களும் இந்தி படங்களை விரும்பி பார்க்கிறார்கள். அமெரிக்காவுக்கு அடுத்து உலகின் மிகப்பெரிய இரண்டாவது திரைப்பட சந்தையாக சீனா விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அமீர்கானின் தங்கல் இந்தி படத்தை மொழி மாற்றம் செய்து சீனாவில் வெளியிட்டனர். இந்த படம் கார்டியன் ஆப் தி கேலக்சி என்ற ஹாலிவுட் படத்தை மிஞ்சி ரூ.800 கோடி வசூலித்ததது.விஜய்யின் மெர்சல் படமும் சீனாவில் திரையிடப்பட்டு வசூல் குவித்தது. இந்த படங்களின் வரிசையில் மறைந்த ஸ்ரீதேவி கடைசியாக நடித்த ‘மாம்’ படத்தையும் சீனாவில் ஆயிரக்கணக்கான தியேட்டர்களில் திரையிட்டனர். இந்த படம் முதல் நாளிலேயே ரூ.9.8 கோடி வசூலித்து முதல் நாள் வசூல் படங்கள் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளது.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment