அமைதி பேச்சுவார்த்தை பணியில் உயிர்நீத்த 115 ஐ.நா பணியாளர்களுக்கு மரியாதை

இந்தியாவை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஜிதேந்தர் குமார். இவர் காங்கோ நாட்டில் நடைபெற்ற மீட்பு பணியின்போது ஐநா சபை சார்பில் அங்கு அனுப்பப்பட்டார். 
இதேபோல் மற்றொரு இந்திய பெண் அதிகாரி சிகா கார்க். இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அதிகாரியான இவர், ஐநா மேம்பாட்டு பணி ஆலோசகராக ெசயல்பட்டு வந்தார். 
இவர்கள் இருவர் தவிர, 113 பேர் கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி முதல் கடந்த மார்ச் மாதம் வரையிலான காலத்தில் ஐநா. அமைதிப் பணியின்போது தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர். 
கார்க் உள்பட 4 இந்தியர்கள் நைரோபியை சேர்ந்த எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கடந்த மாதம் சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
இந்த நிலையில் ஐநா அமைதிப் பணியின்போது உயிர்நீத்த 115 பணியாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஐநா தலைமை செயலகத்தில் நடைபெற்றது. 
இதில் ஐநா பொதுச்செயலாளர் ஆன்டரியோ கட்டரஸ் உள்ளிட்ட ஐநா சபை முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். அப்போது உயிர்த்தியாகம் செய்த 115 பேரின் பெயர்கள் வாசிக்கப்பட்டு அவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
 இந்த நிகழ்ச்சியில் 115 பேரின் குடும்பத்தினரும் பங்கேற்றனர். அப்போது ஐநா பொதுச்செயலாளர் கட்டரஸ் மெழுகுவர்த்தி ஏற்றி 115 பேருக்கும் மரியாதை செலுத்தினார்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment