பிரான்சின் மூன்றாவது பெரிய நகரமான Lyon இல் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 13 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உள்நாட்டு நேரப்படி நேற்று (24) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பேக்கரியொன்றுக்கு அருகில் சனநெரிசல் உள்ள வீதியில் சைக்கிள் ஒன்றில் வந்தவரினால் பொருத்தப்பட்ட பொதியொன்றிலிருந்து இந்த குண்டு வெடித்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இது ஒரு பயங்கரவாத தாக்குதல் எனவும், குண்டு எடுத்துவந்த சந்தேகநபர் தொடர்பில் சி.சி.ரி.வி. காட்சிகளை வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. குறித்த சந்தேகநபரை கண்டுபிடிப்பதில் பிரான் பொது மக்களின் உதவியைக் கோரியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
0 comments:
Post a Comment