30 இலட்சம் கணக்குகள் நீக்கம்

பேஸ்புக்கிலிருந்து கடந்த ஒக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை 30  இலட்சம் போலிக் கணக்குகளை நீக்கியுள்ளதாக  பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவலில், தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

போலி கணக்குகள் உருவாக்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இவற்றுள் கடந்த ஒக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை 30 இலட்சம் போலி கணக்குகள் உருவாக்கப்பட்ட சில நிமிடங்களில் கண்டறிந்து நீக்கி உள்ளது.

இது அதற்கு முந்தைய ஆறு மாதங்களில் நீக்கப்பட்ட போலி கணக்குகளை விட இரு மடங்கு அதிகம் என்றும் பேஸ்புக் தெரவித்துள்ளது.

இருந்தும் தொடர்ந்து இலட்சக்கணக்கான போலி கணக்குகள் உருவாக்கப்படுவதால் அவற்றைக் கண்டறிய முடியாத நிலையும் இருப்பதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.

கடந்த 6 மாதங்களில் வெறுப்பை பரப்பும் வகையிலும், விதிமுறைகளை மீறும் வகையிலும் இருந்த 73 லட்சம் பதிவுகளை நீக்கி உள்ளதாகவும், இது அதற்கு முந்தைய 6 மாதங்களில் நீக்கப்பட்ட பதிவுகளை விட 54 இலட்சம் அதிகம் என்றும் பேஸ்புக் தெரிவித்துள்ளது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment