தஜிகிஸ்தான் சிறையில் கலவரம் - 32 பேர் பலி

தஜிகிஸ்தான் நாட்டில் வாக்தாத் நகரில் சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு பின்னர் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் கைதிகள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
இதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கைதிகளை சமரசம் செய்ய முயன்றனர். ஆனால் கைதிகள் கலவரத்தை கைவிடுவதாக இல்லை. இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 29 சிறை கைதிகள் மற்றும் 3 பாதுகாப்பு படையினர்  உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சிறையில் கலவரம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாகவும்,  மேலும் கலவரம் பரவாமல் இருக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment